இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்டதாக எழுந்த புகாரில், போலீசாரின் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த இளம்பெண், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இருந்து தப்பிக்க, மகளை பகடைக்காயாக பயன்படுத்திய தந்தை.இளைஞரின் குடும்பம் மீது அபாண்டமாக பழி போட்டது ஏன்? நடந்தது என்ன?தலைநகர் டெல்லியில், அசோக் விஹார் பகுதியில் உள்ள மருத்துவமனையில் இருந்து, போலீசாருக்கு ஃபோன் ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய இளம்பெண், “சார் ஜிதேந்திரா-ன்னு ஒருத்தன், என்ன ஒருதலைப்பட்சமா காதலிச்சுட்டு இருந்தான், நான் அவன் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சேன், அதனால என் முகத்துல அவன் ஆசிட்ட ஊத்துனான், நான் என் கைய வச்சு தடுத்ததால, எல்லா ஆசிட்டும் என் கையில பட்டு, கை வெந்துப் போயிருச்சு” என்று கூறினார். இதைக் கேட்ட போலீசார், உடனே மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இளம்பெண் முகத்தில், எந்த ஒரு காயமும் இல்லை, கையில மட்டும் கட்டு போட்டிருந்தார் அந்த இளம்பெண். அப்போது, இளம்பெண் கூறிய தகவல், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. முகத்தில், ஆசிட் வீசும்போது, ஒரு சில துளிகள் நிச்சயம் முகத்தில் படும், ஆனால், இளம்பெண்ணின் முகத்தில் எந்த ஒரு காயமும் இல்லை. இதனால், போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. அடுத்து, ஜிதேந்திராவின் வீட்டுக்கு சென்ற போலீஸ், அவரிடம் விசாரணை நடத்தினர். இளம்பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு ஜிதேந்திரா முற்றிலும் மறுப்பு தெரிவித்தார். இருவரும் கூறிய தகவல்கள், முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், சம்பவம் நடந்த அன்று, ஜிதேந்திரா எங்கே இருந்தார் என்று, கண்டுபிடிக்க, போலீசார் அவரது செல்ஃபோனை ’ட்ரேஸ்’ செய்தனர். அப்போது, ஜிதேந்திராவின் செல்போன் சிக்னல் வேறு ஒரு ஊரை காட்டி உள்ளது. இதனால், அந்த இளம்பெண் பொய் புகார் கொடுத்து உள்ளார் என உறுதி செய்த போலீசார், அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க ஆரம்பித்தனர். டெல்லி முகுந்த்பூரை சேந்த இளம்பெண், அசோக் விஹாரில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த பெண்ணின் தந்தையான அகில் கான், ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் ஜிதேந்திராவின் மனைவி 4 ஆண்டுகள், வேலை பார்த்து வந்துள்ளார். ஜிதேந்திராவின் மனைவியிடம் அடிக்கடி தவறாக நடந்து கொண்ட அகில்கான், அவரை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை எடுத்து வைத்த அகில்கான், அந்த இளம்பெண்ணை அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளார். ”இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை உயிரோடு விடமாட்டேன்” என்று கூறி, மிரட்டி வந்த அகில் கான், ஜிதேந்திரோவின் மனைவியை மிகவும் ’டார்ச்சர்’ செய்துள்ளார். இதனால், ஒரு கட்டத்தில், வேலையை விட்டு நின்றுவிட்டார் ஜிதேந்திராவின் மனைவி.அடுத்து, கடும் மன உளைச்சலில் இருந்த அந்த பெண், வீட்டில் யாரிடமும், பேசாமல், அமைதியாக இருந்துள்ளார். மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை கண்டுபிடித்த ஜிதேந்தர், விவரம் கேட்டுள்ளார். அப்போது தான், அகில் கான் செய்த கொடுமைகளை கணவரிடம் கூறி உள்ளார். இதனால், கடும் கோபமான ஜிதேந்தர், அகில்கான் குறித்து, போலீசாரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். ஆனால், இதனை தெரிந்து கொண்ட அகில்கான், இந்த வழக்கை திசை திருப்ப ’மாஸ்டர் ப்ளான்’ போட்டிருக்கிறார். பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தப்பிக்க, தன்னோட மகளை பகடைக்காயாக பயன்படுத்தி உள்ளார். அதாவது, ஆசிட்டுக்கு பதிலாக, மகளின் கையில், டாய்லெட் கிளினரை ஊற்றி, மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தொடர்ந்து, போலீசாருக்கு மகளை விட்டு போன் பேச வைத்துள்ளார். தான் கல்லூரிக்கு சென்ற போது, ஜிதேந்திர் அவரது நண்பர் 2 பேர் சேர்ந்து, தன்னை வழி மறித்து, முகத்தில் ஆசிட் வீசி விட்டு, தப்பிச் சென்றதாக, கூறி உள்ளார். ஜிதேந்திரருக்கு திருமணமாகியும், தன்னை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்தார் என்றும், தான் காதலை முற்றிலும் நிராகரித்ததாகவும், அவரது மனைவியிடம் கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால், ஜிதேந்தர் மனைவி, இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை, கணவரைக் கண்டிக்கவில்லை என்றும் இளம்பெண் கூறியுள்ளார். தான் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்தால், ஜிதேந்திர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டார் என்றும் புகார் கூறியுள்ளார் அந்த இளம்பெண். ஆனால், இந்த புகாரிலும், இளம்பெண் அளித்த வாக்குமூலத்திலும், முன்னுக்கு பின் முரணான தகவல் இருந்ததை வைத்து, உண்மையை போலீசார் தெரிந்து கொண்டனர். இறுதியில், அகில்கான் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தந்தையும், மகளும் திட்டம் போட்டு நாடகமாடி, அப்பாவி குடும்பத்தை சிக்க வைக்க முயற்சித்த சம்பவம், டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையும் பாருங்கள்... Nigazh Thagavu | இளம்பெண்ணுக்கு துன்புறுத்தல், வழக்கில் இருந்து தப்பிக்க மாஸ்டர் ப்ளான்...