news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பாதுகாப்பில் குளறுபடி - அமித்ஷாவுக்கு கடிதம்
tv

Also Watch

tv

Read this

பாதுகாப்பில் குளறுபடி - அமித்ஷாவுக்கு கடிதம்

அமித்ஷாவுக்கா? ஆளுநருக்கா? கடிதத்தில் குழப்பம்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பு குளறுபடி தொடர் கதையாகி வருவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக கடிதம் எழுதி உள்ளது.

பெரம்பூர் to கொளத்தூர்...
சென்னை பெரம்பூரில் இருந்து கொளத்தூர் செல்லும் வழியில் போதிய அளவில் போலீசார் பணியில் இல்லை என்றும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் புகாரில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் கடும் நெரிசலில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், விஜய் பாதுகாப்பிலும் பொதுமக்களின் பாதுகாப்பிலும் காவல்துறை சமரசம் செய்து கொள்வதாகவும் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

மின் தடை, இணைப்பு துண்டிப்பு
கொளத்தூருக்கு விஜய் சென்றபோது போலீஸ் பந்தோபஸ்து போதிய அளவில் இல்லை என்பதை கண்கூடாக பார்க்க முடிந்ததாகவும் தவெக குற்றம் சாட்டி உள்ளது. விஜயின் பேச்சை பொது மக்கள் கேட்கக் கூடாது என்பதற்காக மின் தடை ஏற்படுத்தி, ஒலிபெருக்கி சாதனத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது.

கடிதத்தில் குளறுபடி
பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தவெக அனுப்பிய கடிதத்தில் பெரும் குளறுபடி ஏற்பட்டு உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற உள்துறை செயலாளரான அஜய் குமார் பல்லாவுக்கு கடிதம் எழுதியதால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

பெரம்பூரில் விஜய்
கடந்த மார்ச் 30ஆம் தேதி விஜய் பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார். இந்த பிரசாரத்தில் கொளத்தூரில் விஜய்க்கு காவல்துறை முறையான பாதுகாப்பு கொடுக்கவில்லை என தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தேர்தல் அதிகாரியிடம் புகார்
இதுதொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து ஆதவ் அர்ஜூனாவும், ஆனந்தும் புகார் மனுவை அளித்திருந்தனர். தவெகவின் துணைப் பொதுச்செயலாளரான சி.டி.ஆர் நிர்மல் குமார் கட்சி சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்.

அமித்ஷாவுக்கா? ஆளுநருக்கா?
அந்த கடிதத்தில், Y பிரிவு பாதுகாப்பில் இருக்கும் விஜய் பிரசாரம் செய்கையில் தமிழக காவல்துறை முறையாக பாதுகாப்பு அளிப்பதில்லை எனக் கூறப்பட்டு இருந்தது. ஆனால், கடிதத்தில் பெறுநர் இடத்தில் உள்துறை செயலாளர் கோவிந் மோகனின் பெயரை குறிப்பிடாமல், மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவின் Ajay Kumar Bhalla பெயரை குறிப்பிட்டு உள்ளனர். அஜய் பல்லா உள்துறைச் செயலாளராக இருந்து கடந்த 2024ஆம் ஆண்டே ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது அவர் மணிப்பூரின் ஆளுநராக இருக்கிறார்.


Related Link
180+ தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் - லோக்போல்

180+ தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் - லோக்போல்

              



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய சினிமா நிகழ்வுகள்

0
6 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved