சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதையடுத்து இன்று வழக்கம் போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.