தவெக தலைவர் விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டால், மீண்டும் அதிகாரம் கிடைக்கும் என, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி உள்ளார். திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் பாண்டியன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் மதிமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த மல்லை சத்யா, விளவங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பாஜகவை சேர்ந்த விஜயதாரணி ஆகியோர் பங்கேற்றனர். திருமண விழாவில் கலந்து கொண்ட இவர்கள் அரசியல் பரஸ்பரமின்றி ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்து கொண்டனர். செல்வப்பெருந்தகை பதில்எங்களுக்கு யாரும் பூஸ்ட் தரத் தேவையில்லை என, தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், தவெக கூட்டணியில் இணைய எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பு விடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தொண்டர்களுக்கு தேவையான பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் ராகுல் காந்தி கொடுத்துள்ளதால் யாரும் பூஸ்ட் தர தேவையில்லை என்றார்.ஆசை நிறைவேறாது - துரை வைகோஅதே போல் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து, தவெக கூட்டணியில் இணைப்பதற்கான ஆசை நிறைவேறாது என்று துரை வைகோவும் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து தமிழக வெற்றி கழகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார். Related Link அமெரிக்காவுக்கு ஷாக் கொடுத்த இந்தியா