தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரசிகை ரேவதியின் குடும்பத்திடம் நடிகர் அல்லு அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அல்லு அர்ஜூன் வீட்டில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர். மேலும் ரேவதியின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கத்தி கோஷமிட்டனர்.