news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பாரதிராஜா குழந்தை மாதிரி என ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

பாரதிராஜா குழந்தை மாதிரி என ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

நடிப்பு பிடிக்காது என்பார்...

13

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தனிப்பட்ட முறையில் பாரதிராஜா ஒரு குழந்தை மாதிரி, மனதில் தோன்றியதை வெளிப்படையாக கூறிவிடுவார் என்று நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ந்து உள்ளார்.

ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, இன்று ஜூன் 10ஆம் தேதி அதிகாலையில் காலமானார். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், பாரதிராஜாவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் கூறியதாவது;
பாரதிராஜாவின் திறமை மற்றும் சாதனைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். திரைத்துறைக்கு அதிகப்படியான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தி, அவர்களையும், திரையுலகையும் வாழ வைத்தவர்.

குழந்தை மாதிரி
இதுமட்டுமின்றி, திரைத்துறையில் யாருக்கு எந்த பிரச்சினை வந்தாலும் முதலாவதாக குரல் கொடுத்து போராடியவர். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது படைப்புகள் மறக்கப்பட மாட்டாது. அவருடைய பெயர் என்றென்றும் தமிழ் மக்களின் இதயத்தில் இருக்கும். தனிப்பட்ட முறையில் அவர் ஒரு குழந்தை மாதிரி. மனதில் தோன்றியதை வெளிப்படையாக கூறி விடுவார்.

நடிப்பு பிடிக்காது என்பார்...
பிடித்தால் பிடித்திருக்கிறது, இல்லையென்றால் பிடிக்கவில்லை என கூறி விடுவார். என்னைப் பற்றியும் அவர் நிறைய விமர்சனங்களை முன்வைத்தார்.
உன்னை எனக்கு பிடிக்கும், உனது நடிப்பு எனக்கு பிடிக்காது என்பார். அவருடன் இருந்தாலே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அவரைப்போல வெளிப்படையாக பேசக் கூடியவர்கள் யாரும் கிடையாது. அதனால்தான் எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் நடிகர் சிவாஜி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர்.

என்றென்றும் என் நினைவில்...
உயிருடன் இருக்கும் போதே அவரைப் பார்க்க வேண்டும் என நினைத்தேன். அவர் குணமாகி விடுவார் அப்புறம் பார்க்கலாம் என கூறினார்கள். அவர் உயிருடன் இருக்கும்போது அவரை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது. அவர் என்றென்றும் எனது நினைவில் என்னுடன் இருப்பார். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும். அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

Related Link
பாரதிராஜா ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் - இளையராஜா உருக்கம்

பாரதிராஜா ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் - இளையராஜா உருக்கம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கன்னிமாரா தோப்பு ஓடையில் நீர் வரத்து அதிகரிப்பு

0
6 mins agoshare
கன்னிமாரா தோப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved