news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த SI
tv

Also Watch

tv

Read this

மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த SI

நாட்றம்பள்ளி , திருப்பத்தூர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மணல் கடத்தி வந்த லாரி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பச்சூர் கல்லியூர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக நாட்றம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் ஆந்திர மாநிலத்தில் இருந்து அந்த வழியாக வந்த ஈச்சர் லாரியை காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித் நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அந்த ஈச்சல் லாரியில்
மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனை பரிசோதனை செய்யும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஈச்சர் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த லாரியை சொரக்கல்நாத்தம் வெள்ளநாயக்கனேரி வழியாக திம்மாம் பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்லை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித் அங்கிருந்து எடுத்துக் கொண்டு காவல் நிலையம் எடுத்துக்கொண்டு வந்தார்.


அப்போது வந்து கொண்டிருந்தபோது திரியாலாம் பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரி (35) என்பவர் அந்த வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக அந்த இருசக்கர வாகனத்தின் மீது உதவி காவல் ஆய்வாளர் ஒட்டி வந்த லாரி மோதியதில் லாரியின் சக்கரத்தில் இருசக்கர வாகனமும் அந்த பெண்ணும் மாட்டிக்கொண்டார்.

பின்னர் சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு லேசான காயம் அடைந்த அந்த பெண்ணை காவல் உதவியாளர் மீட்டு பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் தப்பிச்சென்ற ஓட்டுநரை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்த போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக பெண் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

மேலும் நாற்றம்பள்ளி காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட மணல் கடத்தல் லாரியை திம்மம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதால் அந்தப் பகுதிக்கு மணல் கடத்திய லாரி கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Link
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிக்கப் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட புகையிலை பொருட்கள்

1
26 mins agoshare
புகையிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved