மொரீசியஸ் நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். இரண்டு நாள் பயணமாக மொரீசியஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அளித்த விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்றதோடு, அவர்கள் முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.