news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news எம்பி சீட் தருவதாக ஏமாற்றினார் இபிஎஸ் என பிரேமலதா காட்டமாக பதிலடி
tv

Also Watch

tv

Read this

எம்பி சீட் தருவதாக ஏமாற்றினார் இபிஎஸ் என பிரேமலதா காட்டமாக பதிலடி

ICUவில் இருந்த தேமுதிக - இபிஎஸ்

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ICUவில் இருந்த தேமுதிகவுக்கு உயிர் கொடுத்தது அதிமுக தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பவர் நான்காம் தர பேச்சாளரை போல் பேசக்கூடாது என்று பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு தேமுதிக சென்றதால் இபிஎஸ் வயிற்றெரிச்சலில் பேசுவதாகவும், 2024ஆம் ஆண்டு எம்.பி. சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி எனவும் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது;

* அதிமுக உடன் ஒரு வென்டிலேட்டர் கட்சி கூட்டணியில் இருந்தது
* ICUவில் இருந்த தேமுதிகவிற்கு உயிர் கொடுத்தது அதிமுக

* இன்று அந்த வென்டிலேட்டர் கட்சியும் திமுக உடன் கைகோர்த்துவிட்டது
* அரை சதவீத வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 சீட்

வென்டிலேட்டர் கட்சி என தேமுதிகவை விமர்சித்து இபிஎஸ் பேசி இருந்தார்.


திருவண்ணாமலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது;

* Ex முதல்வர் என்ற பொறுப்பில் இருப்பவர் நான்காம் தர பேச்சாளரை போல் பேசக்கூடாது
* திமுக கூட்டணிக்கு தேமுதிக சென்றதால் வயிற்றெரிச்சலில் பேசுகிறார் இபிஎஸ்
* இபிஎஸ்சின் நடவடிக்கையால் சொந்த கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர்

* மாநிலங்களவை சீட் தருவதாக ஏமாற்றினார் இபிஎஸ்
* மே 4க்கு பிறகு இபிஎஸ் ICUவுக்கு போகாமல் இருக்க வேண்டும்

* கூட்டணியில் இருந்தபோது தேமுதிகவின் அருமை தெரியவில்லை
* கூட்டணியை விட்டு வெளியேறிய வயிற்றெரிச்சலில் பொங்குகிறார் இபிஎஸ்
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Related Link
இபிஎஸ் விமர்சனமும் ஸ்டாலின் பதிலடியும்

இபிஎஸ் விமர்சனமும் ஸ்டாலின் பதிலடியும்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமனம்

5
29 mins agoshare
தலைமை செயலாளர் மாற்றம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved