news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமனம்
tv

Also Watch

tv

Read this

தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமனம்

புதிய டிஜிபி நியமனம்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை அதிரடியாக மாற்றிய தேர்தல் ஆணையம், புதிய தலைமைச் செயலாளராக சாய்குமாரை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.

வருகிறது தேர்தல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை பணியிடம் மாற்றி, தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், தமிழ்நாடு செய்தி காகித நிறுவன தலைவராக இருந்தவர். இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனிச் செயலாளராகவும் இருந்து உள்ளார்.

புதிய டிஜிபி நியமனம்
தமிழக தலைமைச் செயலாளர் தவிர ஆயுதப்படை, லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியும் மாற்றப்பட்டு உள்ளார். ஆயுதப்படை மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு உள்ளார்.

புதிய டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமனம் செய்து, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியில் இணைந்தது தொடர்பாக மாலை 6 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேர்தலுக்கு முன்னர் அதிகாரிகள் மாற்றம் என்பது வழக்கமாக நடைபெறுவது தான். ஆனால், தேர்தலுக்கு 2 வாரங்களே உள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலாளரையே அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது, பேசு பொருளாகி உள்ளது.

Related Link
விஜய் வேட்புமனு, கடைசி வரை த்ரில், BPஐ எகிற வைத்த பரிசீலனை

விஜய் வேட்புமனு, கடைசி வரை த்ரில், BPஐ எகிற வைத்த பரிசீலனை

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உடற் தகுதியிலிருந்து மீண்டு வராத எம்.எஸ்.தோனி

0
14 mins agoshare
Sports news








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved