news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews கர படத்தின் கண்ணம்மா என் கண்ணம்மா பாடல் வெளியானது
tv

Also Watch

tv

Read this

கர படத்தின் கண்ணம்மா என் கண்ணம்மா பாடல் வெளியானது

Kara

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா செய்திகள்

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் திரைப்படம் : 

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ராக்கா என பெரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது. ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் உருவாக்கி வருகின்றனர்.

இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அனுஷ்கா சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது.

"தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்க ஆசை" : 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள 'LIK' திரைப்படம், தனக்கு கம்பேக் திரைப்படமாக அமையும் என்று நடிகை மாளவிகா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தான் நடித்த 42 படங்களில் இந்தப்படத்தில் தான் முதல்முறையாக டப்பிங் செய்துள்ளதாகவும், இந்தப்படம் பொறுமையை கற்றுக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், அதற்காக கதைகள் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

விமர்சனங்களுக்கு நடிகை தீபிகா படுகோனே விளக்கம் : 

நடிகரும் கணவருமான ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படத்திற்கு ஆதரவு, பாராட்டு என எதுவும் தெரிவிக்கவில்லை என தன் மீது எழுந்த விமர்சனத்திற்கு தீபிகா படுகோனே விளக்கம் கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இது குறித்து கமெண்ட் செய்துள்ள அவர், துரந்தர் படத்தை உங்கள் அனைவரையும் விட முன்னரே தாம் பார்த்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஆதரவு என்பது எப்போதும் வெளிப்படையாக இருக்க வேண்டியதில்லை என்ற கருத்தை தமது பதிலில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ரூ.1,641 கோடி வசூல் செய்த துரந்தர்-2 திரைப்படம்..?

ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரத்து 641 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய உளவாளியை மையமாக வைத்து ஆக் ஷன் திரில்லர் ஜானரில் ஆதித்யா தார் இயக்கிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் இப்படம் ஆயிரத்து 33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்னும் 200 கோடி வசூல் செய்தால், இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற புஷ்பா 2-வின் சாதனையை துரந்தர் 2 முறியடித்து புதிய சாதனை படைக்கும்...!

கர படத்தின் கண்ணம்மா என் கண்ணம்மா பாடல் வெளியானது : 

நடிகர் தனுஷின் கர திரைப்படத்தின் கண்ணம்மா என் கண்ணம்மா பாடல் வெளியாகியுள்ளது. போர் தொழில் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் நடிகர் தனுஷ் எழுதி பாடிய இப்பாடல் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மீண்டும் இணையும் 'தேரே இஷ்க் மெயின்' கூட்டணி? : 

தனுஷ் மற்றும் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் மீண்டும் இணைந்து வரலாற்று காதல் கதையம்சம் கொண்ட கதையில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'தேரே இஷ்க் மெயின்' ((Tere Ishk Mein)) திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

மீண்டும் தனுஷ்,கீர்த்தி சனோனை வைத்து ஆனந்த் எல்.ராய் புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Related Link
மதுப்பழக்கம், கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீர் - ரஜினி அறிவுறுத்தல்

மதுப்பழக்கம், கஞ்சாவுக்கு அடிமையாகி விடாதீர் - ரஜினி அறிவுறுத்தல்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வைபவ் சூர்யவன்ஷி குறித்து யுவ்ராஜ் சிங் கருத்து

0
1 hr 18 mins agoshare
Sports 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved