news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews உடற் தகுதியிலிருந்து மீண்டு வராத எம்.எஸ்.தோனி
tv

Also Watch

உடற் தகுதியிலிருந்து மீண்டு வராத எம்.எஸ்.தோனி

MS Dhoni

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sports news

டெல்லிக்கு எதிரான போட்டியில் களம் காணும் பிரெவிஸ் :

இடுப்பு வலி காரணமாக, நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளில் விளையாடாத சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரர் டெவால்ட் பிரெவிஸ், ஏப்ரல் 11-ம் தேதி டெல்லிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறார்.

பிளேயிங் லெவனில் ((Playing 11)) மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டெவால்ட் பிரெவிஸ் அணிக்கு திரும்புவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இவரது வருகையால் சிஎஸ்கே அணி வெற்றிக் கணக்கை தொடங்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் :

மொனாக்கோவில் நடைபெறும் மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றுக்கு முன்னணி வீரர்கள் நேரடியாக தகுதி பெற்றனர். இந்த நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், இத்தாலியின் ஜானிக் சின்னர், பிரான்சின் யூகோ ஹம்பர்ட்டை 6-க்கு 3, 6-க்கு 0 என்ற நேர்செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ் 6-க்கு 1, 6-க்கு 3 என்ற நேர்செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பயசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

"தயவு செய்து தன்னை சிஎஸ்கேவின் ஆலோசகராக்குங்கள்" :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனை நியமிக்க வேண்டும் என ரசிகர் கோரிக்கை விடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த நிலையில், தயவு செய்து தன்னை சிஎஸ்கேவின் ஆலோசகராக்குங்கள் என்றும்.

சென்னைக்கு மிக அருகில் தான் மாலத்தீவு உள்ளது எனவும் பீட்டர்சன் நகைச்சுவையாக பதிலளித்தார். கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த பீட்டர்சன், அந்த சீசனின் பாதியிலேயே மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றது சர்ச்சையானது.

உடற் தகுதியிலிருந்து மீண்டு வராத எம்.எஸ்.தோனி :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீனியர் வீரர் தோனி, உடற் தகுதியிலிருந்து மீண்டு வராததால் சனிக்கிழமை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களம் காண்பது சந்தேகம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் மூன்று போட்டியிலும் தோல்வியை தழுவிய சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தோனியின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே கிடைத்துள்ளது.

Related Link
இன்றைய விளையாட்டுத் தகவல்கள்

இன்றைய விளையாட்டுத் தகவல்கள்





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருபெயர்ச்சி 2026 மீனம்

3
2 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved