பெண் பணியாளர்களுக்கு மாதவிலக்கு விடுப்பு வழங்கும் கொள்கையை தேசிய அளவில் உருவாக்க கோரி, மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பெண்களை பணி அமர்த்துவதில் சிக்கல்களை உருவாக்க கூடும் என்று கூறி, உச்ச நீதிமன்றம், மனுவை நிராகரித்தது. பணி புரியும் மகளிருக்கு... பணி புரியும் பெண்களுக்கு நிறுவனங்களில் மாதவிலக்கு காலத்தில் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு அளிக்க மாநிலங்கள் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று மார்ச் 13ஆம் தேதி, தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வாய்ப்புகள் பறிபோகும்விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டு வந்தால், அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும். ஊதியத்துடன் விடுப்பு என்றால் நிறுவன உரிமையாளர்கள், பெண்களை பணியில் அமர்த்த மாட்டார்கள். பெண்களின் வாய்ப்புகள் பறிபோகும். இது பெண்களிடையே உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்களை விட பெண்கள் தாழ்வானர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கும்.விழிப்புணர்வு வேறு, சட்டம் வேறு விழிப்புணர்வை ஏற்படுத்துவது வேறு, கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வருவது வேறு, சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து பெண்களுக்கு மாதவிலக்கு விடுப்பு அளிக்கின்றன, அது வரவேற்கத்தக்கது. ஆனால், அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கினால் அது பணியிடங்களில் பெண்களின் வாய்ப்பை குறைக்கும். அரசியலமைப்பு ரீதியாக பெண்களுக்கு உரிமைகள் உள்ளன. ஆனால், உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இதுவரை இதுதொடர்பாக எந்த பெண்ணும் நீதிமன்றத்தை அணுகவில்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். Related Link நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்