நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின், இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடக்கிறது. சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் மக்களவை தலைவரை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம், மாா்ச் 9ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும், கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.பட்ஜெட் கூட்டத் தொடர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த ஜனவரி 28ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதல்கட்ட அமா்வில் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டன. முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் என்று, பிரச்னைகள் எழுப்பபட்டன. ஓம் பிர்லாவுக்கு எதிராக... பிப்ரவரி 3ஆம் தேதி, மக்களவையில் காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மறுநாள், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பிரதமா் மோடி உரையாற்ற இருந்த நிலையில், எதிா்க்கட்சிகளின் கடும் அமளியால், அவரது உரை தவிா்க்கப்பட்டது. பிரதமருக்கு எதிராக ‘எதிா்பாராத செயலில்’ ஈடுபட காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்ததாகவும், எனவே, அவைக்கு வர வேண்டாம் என பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாகவும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்த கருத்து, பரபரப்பை பற்ற வைத்தது. இதையடுத்து, ஓம் பிா்லா முற்றிலும் பாரபட்சத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, தீா்மானம் கொண்டுவர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தரப்பில் நோட்டீஸ் தரப்பட்டது. தொடங்குகிறது 2ஆம் அமர்வு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் கட்ட அமா்வு மாா்ச் 9ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் அலுவலில் மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் பட்டியலிடப்பட்டு உள்ளது. சபாநாயகரை தகுதி நீக்கம் செய்ய முடியுமா?* அரசமைப்புச் சட்டத்தின் 94-சி பிரிவின்கீழ், பெரும்பான்மை வாக்குகளுடன் தீா்மானம் நிறைவேற்றி, மக்களவைத் தலைவரை பதவிநீக்கம் செய்ய முடியும்.* மக்களவைத் தலைராக இருந்த இருந்த ஜி.வி.மாவலங்கா் - 1954, ஹுக்கம் சிங் - 1966, பல்ராம் ஜாக்கா் - 1987, ஆகியோா் நம்பிக்கையில்லா தீா்மானத்தை எதிா் கொண்டனா். ஆனால், எந்தத் தீா்மானமும் வெற்றி பெறவில்லை. தற்போது எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில், ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானமும் தோல்வியையே சந்திக்கும் என கூறப்படுகிறது. ஆக, போர்ச்சூழல் நிறைந்த பரபரப்பான சூழலில், நாடாளுமன்றம் கூடுகிறது. Related Link 16 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு எச்சரிக்கை