சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அழிக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் வெற்று அச்சுறுத்தல்களை மட்டுமே வெளியிடுவதாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் பதிலடி கொடுத்துள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.