Also Watch
Read this
By: Web Team

மோட்டார் வாகனங்கள் அனுமதிக்கப்படாத இடம் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஒரு தீவு தான், காரே இல்லாமல் ஒரு அமைதியான தீவு கடந்த கால வாழ்க்கை முறையுடன் இன்றும் இயங்க என்ன காரணம் என்பதை விவரிக்கிறது.

3.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேக்கினாக் தீவில் 600 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இந்த தீவில் மோட்டார் வானங்கள் வண்டிகள் கூட இந்த தீவின் தெருக்களில் தடை செய்யப்பட்டுள்ளது. மேக்கினாக் தீவில் நடைபயிற்சி,மிதிவண்டி சவாரி மற்றும் குதிரை வண்டிகள் மட்டுமே முதன்மையான போக்குவரத்து முறை ஆகும்.
இதற்கு முக்கிய காரணம் அந்த பகுதியில் இருக்கும் 500 குதிரைகள் தான், 1898 -ல் ஒரு கார் பேக்ஃபயர் ஆனதால் அதில் இருந்து வந்த சத்தத்தில் அருகில் இருந்த குதிரைகள் அச்சமடைந்ததை அடுத்து இந்த தடை அமுல்படுத்தப்பட்டது. இந்நாட்டில் தீவிரமான குளிர்காலம் முதல் சுட்டெரிக்கும் கோடை வரை குதிரைகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தீவில் வாடகை சைக்கிள்கள் உள்ளுவாசிகளும் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு, முக்கிய போக்குவரத்து சாதனங்களாக உள்ளன. இந்த தீவில் சத்தம் கேட்டால் அது அங்கு உள்ள வாத்துக்கள் அல்லது ஆந்தைகளில் குரலாக தான் இருக்கும்.
20 ஆம் நூற்றாண்டில் ஆட்டோமொபைல்கள் எங்கும் பரவியதால், மேக்கினாக் தீவில் மோட்டார் வாகனங்கள் இல்லாததால் அந்த இடம் ஒரு சிறப்புத் தன்மையைப் பெற்றுள்ளது,

தீவின் பெரும்பகுதி மேக்கினாக் தீவு மாநில பூங்காவால் சூழப்பட்டிருந்தாலும், ஷாப்பிங், அழகிய பைக் சவாரிகள் மற்றும் கலைக்கூடங்களைப் பார்வையிடுவது போன்ற பல விஷயங்கள் இன்னும் உள்ளன.
இந்த தீவு பல நூறு ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருவதுடன் கிட்டத்தட்ட கார்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் அவற்றை தடை செய்திருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved