news-tamil-logo

3/21/2026, 11:29:03 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சீனாவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது
tv

Also Watch

tv

Read this

சீனாவுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது

Trumph

Posted on: Jan 25, 2026 09:49 AM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவிற்குள் பொருட்கள் அனுப்ப சீனாவிற்கு கனடாவை ஒரு 'டிராப் ஆப் போர்ட்' ஆக மாற்றப் போகிறேன் என்று கவர்னர் மார்க் கார்னி நினைத்தால், அவர் மிகவும் தவறாக நினைக்கிறார்.

சீனா கனடாவை உயிருடன் சாப்பிடும், அதை முற்றிலுமாக விழுங்கும். அவர்களின் வணிகங்கள், சமூக கட்டமைப்பு மற்றும் பொது வாழ்க்கை முறை ஆகியவற்றை அழிக்க நினைக்கிறது.

சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனடா பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கும் உடனடியாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக இருக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் அதிபர் டிரம்ப் கூறி வந்தார். தற்போது கனடா பிரதமர் மார்க் கார்னியைகவர்னர் என டிரம்ப் விமர்சனம் செய்து உள்ளார். கடந்த காலத்தில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவையும் கவர்னர் என குறிப்பிட்டு டிரம்ப் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Link
அமெரிக்க ராணுவத்தில் இணையும் F-47 போர் விமானம்

அமெரிக்க ராணுவத்தில் இணையும் F-47 போர் விமானம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved