Also Watch
Read this
வாக்கெடுப்பில் இருந்து பாமக விலகல்
தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் இருந்து விலகி இருக்க விரும்புவதாக சட்டப்பேரவையில் பேசிய அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் எம்எல்ஏவுமான சௌமியா அன்புமணி அறிவித்து உள்ளார்.

TVK ஆட்சிக்கு ஆதரவில்லை
பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீா்மானம் மீது பேசிய மமக MLA தமிமுன் அன்சாாி தவெக ஆட்சிக்கு ஆதரவு இல்லை என அறிவித்தார். முதலமைச்சரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நியமனம் செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவிப்பதாவும் பேசி உள்ளார்.
தவெக ஆட்சிக்கு ஆதரவில்லை
தமிழக வெற்றிக் கழக ஆட்சி தொடா்வதற்கு ஆதரவு அளிக்கவில்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அறிவித்து உள்ளது. சட்டப்பேரவையில் பேசிய எம்எல்ஏ நித்தியானந்தம், தவெக ஆட்சியின் நிலையற்ற தன்மையின் காரணமாக எதிா்ப்பு தொிவிப்பதாக விளக்கம் அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved