Also Watch
Read this

ஐபிஎல் தொடரில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், குஜராத் அணி 82 ரன் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

5 விக்கெட் இழப்பு, 168 ரன்
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அணியின் முக்கிய துடுப்பாளராக சாய் சுதர்சன் 44 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

வாஷிங்டன் சுந்தர் 33 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார். நிஷாந்த் சிந்து 22 ரன்களும், ஜேசன் ஹோல்டர் இறுதியில் 11 ரன்களும் சேர்த்தனர். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் பிரஃபுல் ஹிங்கே மற்றும் சகிப் ஹுசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

86 ரன், விக்கெட் இழப்பு
169 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்கத்திலேயே தடுமாறியது. டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆக, அபிஷேக் சர்மா 6 ரன்களில் அவுட் ஆனார். இஷான் கிஷன் 11 ரன்கள் எடுத்தாலும் அணியை காப்பாற்ற முடியவில்லை. ஹென்ரிக் கிளாசன் 14, சஞ்சய் அரோரா 16, என சிறிய பங்களிப்பு செய்தனர். முடிவில் ஹைதராபாத் அணி 14.5 ஓவர்களில் 86 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

புள்ளி பட்டியலில் முன்னேற்றம்
குஜராத் அணியின் பந்துவீச்சில் காகிசோ ரபாடா மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி, ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved