Also Watch
Read this
நேரலையில் ஒளிபரப்பு
தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக நம்பிக்கை கோரும் தீர்மானம் இன்று நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
எப்படி நடக்கும் வாக்கெடுப்பு?
* சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு முதலில் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும்
* இதற்கு எதிர்தரப்பில் எதிர்ப்பு எழவில்லை எனில் வாக்கெடுப்பின் முடிவு அறிவிக்கப்படும்
* தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினால், அரசு ஆதரவு MLAக்கள் எழுந்து நிற்க கேட்டுக்கொள்ளப்படும்
* அதில் அரசுக்கு யார் ஆதரவு, எதிர்ப்பு என பதியப்பட்டு பேரவைத் தலைவரிடம் தெரிவிக்கப்படும்
* இருப்பினும் இன்றைய வாக்கெடுப்பு குரல் வாக்கெடுப்பின்றி எண்ணிக் கணித்தல் முறையில் நடக்கலாம் என தகவல்

முன்மொழிந்தார் முதலமைச்சர் விஜய்
சட்டப்பேரவையில், தவெக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இதனை தொடர்ந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு
தவெக அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக பேரவையில் காங். சட்டமன்றக்குழு தலைவா் ராஜேஷ்குமாா் அறிவித்தார்.

தவெக அரசுக்கு சிபிஎம் ஆதரவு
தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவா் செல்லசுவாமி அறிவித்தார்.
தவெக அரசுக்கு விசிக ஆதரவு
தவெக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக பேரவையில் அக்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவா் வன்னி அரசு அறிவித்தார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved