கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக – கேரள எல்லையான தேனி மாவட்டம் முந்தல் சோதனைச்சாவடியில் நடைபெற்று வரும் மருத்துவப் பரிசோதனை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறையினர் தொடர்ந்து 12 நாட்களாக பரிசோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை சோதனை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.