கேரளாவில் நிபா வைரஸ் மற்றும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாடு - கேரள எல்லையான குமரி மாவட்டம் களியக்காவிளையில் 3 ஆவது நாளாக தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களை களியக்காவிளையில் 24 மணி நேரமும் சுகாதாரத்துறையினர் சோதனை செய்கின்றனர். மேலும் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையும் செய்யப்படுகிறது.