நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரும், துணைக் கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக யாஸ்திகா பாட்டியாவும், உமா செத்ரியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டி ஹேமலதா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சயாலி சத்கரே, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தேஜல் ஹசாப்னி உள்ளிட்ட 16 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.