news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழ்நாட்டில் கூட்டணி அரசியலின் தேவை - அமித்ஷா
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாட்டில் கூட்டணி அரசியலின் தேவை - அமித்ஷா

பாஜகவுக்கான பலம்

Posted on: Mar 28, 2026 05:48 AM

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில், கூட்டணி அரசியலின் தேவை இருப்பதாக கூறியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக உடன் பாஜக நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். விஜய் உடன் கூட்டணிக்கு முயற்சிக்கவில்லை என்றும், கூட்டணியில் த.வெ.க.வைச் சேர்த்திருந்தால், தங்களின் வாக்கு வங்கியை பாதித்திருக்கும் என்றும் கூறி உள்ளார்.

பாஜகவுக்கான பலம்
இதுதொடர்பாக 'டைம்ஸ் நவ் சுமிட் 2026' நிகழ்வில் அமித்ஷா கூறி இருப்பதாவது;
தமிழகத்தில் பாஜகவுக்கான அமைப்பு ரீதியிலான பலம் இன்னும் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் நாங்கள் இன்னும் பலமாக வளர வேண்டி உள்ளது. இதனால் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதை விட எங்களின் 'பெரிய அண்ணா அதிமுக உடன்' கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம். அதிமுக உடனான கூட்டணியே எங்களுக்கு பலம் சேர்க்கிறது.

தவெக உடன் கூட்டணி
இதனால் கூட்டணி கட்சிகளுடனான உறவு தமிழகத்தில் அவசியம். எனவே பாஜக, அதிமுகவுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதோடு, சிறிய கட்சிகளையும் இணைத்து செயல்பட்டு வருகிறது. விஜயை வைத்து எந்த பயனும் இல்லை. அதனால் தவெக உடன் கூட்டணி பேசவில்லை.

தமிழகத்தில் தற்போது ஆளும் திமுக மீது எதிர்ப்பு அலை வீசுகிறது. இதனை என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் வெறுப்பு அரசியலை பரப்பி உள்ளனர். இதனால் தமிழகத்தில் வலுவான பெரும்பான்மையுடன் எங்களின் கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அமித்ஷா கூறி உள்ளார்.

Related Link
சென்னைக்கு சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி

சென்னைக்கு சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோவைக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை

4
32 mins agoshare
sp velumani pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved