news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஐபிஎல் - 2 வாரங்கள் தோனிக்கு ஓய்வு
tv

Also Watch

tv

Read this

ஐபிஎல் - 2 வாரங்கள் தோனிக்கு ஓய்வு

இன்று முதல் ஐபிஎல்

Posted on: Mar 28, 2026 06:08 AM

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஐபிஎல் தொடரில், முதல் 2 வாரங்கள் நடைபெறும் போட்டிகளில் தோனி விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருவதாக, சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

உறுதிப்படுத்திய சிஎஸ்கே
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான எம்.எஸ்.தோனிக்கு கால் தசைப் பிடிப்பால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தோனி இந்தத் தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்று, சி.எஸ்.கே. அணி உறுதிப்படுத்தியது.

சமூக ஊடக பதிவு
இதுதொடர்பாக, சிஎஸ்கே அணி தமது சமூக ஊடக பதிவில், "எம்.எஸ்.தோனி தற்போது கால் தசைப்பிடிப்பிற்காக சிகிச்சை பெற்று வருகிறார். இதன் விளைவாக, அவர் ஐ.பி.எல். 2026 தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளை தவறவிட வாய்ப்பு உள்ளது. விரைவில் குணமடையுங்கள், தல," என்று பதிவிட்டிருந்தது.

ஆகஸ்ட் 2020ல் இருந்து...
கடந்த ஆகஸ்ட் 2020ஆம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, பிரத்தியேகமாக ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். கடந்த சீசனில், சூப்பர் கிங்ஸ் அணிக்காக அனைத்து 14 போட்டிகளிலும் விளையாடிய தோனி, 24.50 சராசரியில் 135.17 ஸ்டிரைக் ரேட் உடன் 196 ரன்கள் எடுத்தார். முழங்கை எலும்பு முறிவு காரணமாக, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடரிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு சீசனின் தொடக்கத்திலேயே தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

நம்பிக்கை நட்சத்திரம் தோனி
சி.எஸ்.கே. அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தோனி, சமீபத்திய சீசன்களில் காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். 2023ல் முழங்கால் காயத்துடன் இருந்தபோதிலும், இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, சி.எஸ்.கே. அணிக்கு ஐந்தாவது ஐ.பி.எல் பட்டத்தை தோனி பெற்றுத் தந்தார். ஐ.பி.எல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராக தோனி திகழ்கிறார்.

இன்று முதல் ஐபிஎல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. சாம்பியன் பட்டத்தை வெல்ல 10 அணிகள் களத்தில் நிற்கின்றன. ஐபிஎல் முதலாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. தொடக்கப் போட்டியில் வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

Related Link
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்வு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோவைக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை

2
0 min agoshare
sp velumani pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved