Also Watch
Read this
Posted on: Mar 28, 2026 09:16 AM
திமுக ஆட்சியில், கோயம்புத்தூருக்கு எந்த ஒரு புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்று, எஸ்.பி.வேலுமணி குற்றம் சுமத்தி உள்ளார்.
உற்சாக வரவேற்பு
அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக கோவைக்கு வந்த, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தின் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க வரவேற்றனர்.
அதிமுக கோட்டை
அப்போது எஸ்.பி.வேலுமணி கூறியதாவது;
வெற்றிகரமான, வலுவான கூட்டணியை அமைத்து கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும், அதிமுக வேட்பாளர்களை இபிஎஸ் அறிவித்து விட்டார். கோவை மாவட்டம் என்றைக்குமே அதிமுகவின் கோட்டை. 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோவை ஜெயலலிதாவின் ஆட்சியிலும், இபிஎஸ் ஆட்சியிலும் வளர்ச்சி அடைந்தது.

இபிஎஸ் முதல்வர் ஆவார்
அதிமுக ஆட்சியில் கேட்ட திட்டங்கள் எல்லாம் கோவைக்கு வழங்கப்பட்டது. இதனால், கோவை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த திட்டங்களும் வழங்கப்படவில்லை. அவிநாசி உட்பட கோவையின் 11 தொகுதிகளிலும், திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முழுமையாக வெற்றிபெறும். தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வென்று, எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார்.

மிகப் பெரிய வெற்றி
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், இன்னும் விடுபட்ட திட்டங்களை எல்லாம் கோவைக்கு கொண்டு வருவோம். திமுக ஆட்சியில் அனைத்து வரியும் உயர்த்தப்பட்டு உள்ளது, இதனை மக்கள் அனைவரும் உணர்ந்து உள்ளனர். இதனால், அதிமுக கூட்டணி நிச்சயம் மிகப்பெரிய வெற்றிபெறும். நாங்கள் மக்களுக்கு கொடுத்துள்ள திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்போம்.
இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved