news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சென்னைக்கு சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி
tv

Also Watch

tv

Read this

சென்னைக்கு சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி

எங்கு கடும் போட்டி? எங்கு சுலபம்?

Posted on: Mar 28, 2026 05:15 AM

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 127 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த எடப்பாடி பழனிசாமி, சென்னையிலுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் யார்? என்ற விபரத்தை சஸ்பென்ஸாக வைத்திருக்க, 2ஆம் கட்ட பட்டியலில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை பார்க்கலாம்...

2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல், யார் யார்?
அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதன்படி கும்மிடிப்பூண்டிக்கு சுதாகர், பொன்னேரி தனித் தொகுதிக்கு சிறுணியம் பலராமன், திருத்தணி தொகுதிக்கு கோ.அரி, திருவள்ளூருக்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மாதவரம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் மூர்த்தி, திருவொற்றியூர் தொகுதிக்கு குப்பன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 2011 தேர்தலில் வெற்றி பெற்ற குப்பன், 2021 தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

4ஆவது முறையாக வாய்ப்பு
ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு பழனி, தாம்பரம் தொகுதிக்கு சிட்லபாக்கம் ராஜேந்திரன், செங்கல்பட்டு தொகுதிக்கு கஜேந்திரன், செய்யூர் தொகுதிக்கு ராஜசேகர், மதுராந்தகம் தொகுதிக்கு மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் தொகுதிக்கு சோமசுந்தரம், அரக்கோணம் தொகுதிக்கு ரவி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக மூன்று முறை அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு MLA ஆன ரவிக்கு, 4ஆவது முறையாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

துரைமுருகன் தொகுதியில் யார்?
அமைச்சர் துரைமுருகன் தொகுதியான காட்பாடியில் ராமு என்பவரும், ஆற்காடு தொகுதியில் சுகுமாரும், வேலூர் தொகுதியில் அப்பு, அணைக்கட்டு தொகுதியில் வேலழகன், குடியாத்தம் தொகுதியில் பரிதா புருஷோத்தமனும், வாணியம்பாடியில் செந்தில்குமாரும், ஆம்பூர் தொகுதியில் வெங்கடேசனும் களம் காண்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊத்தங்கரை தொகுதியில் தமிழ்செல்வம், பர்கூர் தொகுதியில் கோவிந்தராஜன், கிருஷ்ணகிரியில் அசோக்குமார், ஒசூரில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி களமிறங்குகிறார்கள். இதில் பாலகிருஷ்ண ரெட்டி, கலவர வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று 2019-ல் அமைச்சர் பதவியை இழந்தார். 2019 இடை தேர்தல், 2021 பொதுத் தேர்தலில் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஒசூர் தொகுதியில் நின்று திமுகவிடம் தோல்வி அடைந்தார்.

சிட்டில் எம்எல்ஏவுக்கு வாய்ப்பில்லை
பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் மரகதம் வெற்றிவேல், அரூர் தனி தொகுதியில் சம்பத்குமார், செங்கம் தனி தொகுதியில் வேலு, கீழ்பென்னாத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், ஆரணியில் ஜெயசுதாவும் வேட்பாளர்களாக நிற்கிறார்கள். ஆரணி சிட்டிங் எம்.எல்.ஏ.வான சேவூர் ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புது முகமான ஜெயசுதாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. செய்யாறு தொகுதிக்கு முக்கூர் சுப்பிரமணியன், வந்தவாசி தொகுதிக்கு ராணி, திண்டிவனம் தொகுதிக்கு அர்ஜூனன், வானூர் தொகுதிக்கு முருகன், விழுப்புரம் தொகுதிக்கு விஜயா, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதிக்கு பழனிசாமி, உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு குமரகுரு ஆகியோர் வேட்பாளர்கள் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

செங்கோட்டையனுக்கு எதிராக...
சங்கராபுரம் தொகுதியில் ராகேஷ், கள்ளக்குறிச்சி தொகுதியில் ராஜீவ்காந்தி, கங்கவல்லி தனி தொகுதியில் நல்லதம்பி, ஆத்தூர் தொகுதியில் ஜெயசங்கரன், ஏற்காட்டில் உஷாராணி, ஓமலூரில் மணி, மேட்டூரில் வெங்கடாஜலம், சங்ககிரியில் வெற்றிவேல், சேலம் தெற்கில் வினோத், வீரபாண்டியில் பாலாஜி சுகுமார் ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்கள். சேந்தமங்கலம் தொகுதியில் சந்திரசேகரனும், நாமக்கலில் ஸ்ரீதேவி, பரமத்தி வேலூரில் சேகர், திருச்செங்கோட்டில் சந்திரசேகர், ஈரோடு கிழக்கில் மனோகரன், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா, காங்கேயம் தொகுதியில் நடராஜ், பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார், அந்தியூரில் ஹரிபாஸ்கர் களம் காணும் நிலையில், முன்னாள் அமைச்சரும், த.வெ.க.வின் மாநில நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரபு என்பவரை அதிமுக களமிறக்கியுள்ளது. அதேபோல, பவானிசாகர் தனி தொகுதியில் செங்கோட்டையன் ஆதரவாளராக இருந்த பண்ணாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
கூடலூர் தொகுதியில் பொன்.ஜெயசீலன், குன்னூர் தொகுதியில் ராமு, மேட்டுப்பாளையம் தொகுதியில் சின்னராஜ், திருப்பூர் வடக்கில் முன்னாள் அமைச்சர் ஆனந்தன், பல்லடம் தொகுதியில் பரமசிவம், சூலூர் தொகுதியில் கந்தசாமி, கவுண்டம்பாளையத்தில் அருண்குமார், கோவை தெற்கில் அம்மன் அர்ஜூணன், சிங்காநல்லூர் தொகுதியில் ஜெயராம், கிணத்துக்கடவு தொகுதியில் முன்னாள் அமைச்சர் தாமோதரன், பொள்ளாச்சியில் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறையில் லட்சுமண சிங், உடுமலைப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்பாளர்கள் என அதிமுக அறிவித்துள்ளது.

லீமா ரோஸ் மார்ட்டினுக்கு வாய்ப்பு
பழனி தொகுதியில் ரவி மனோகரன், ஆத்தூர் தொகுதியில் விஸ்வநாதன், நிலக்கோட்டையில் தேன்மொழி, வேடசந்தூரில் பரமசிவம், அரவக்குறிச்சியில் செல்வக்குமார், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திவ்யா, குளித்தலை தொகுதியில் கருணாகரன், மணப்பாறை தொகுதியில் விஜயகுமார், ஸ்ரீரங்கம் தொகுதியில் மனோகரன், திருச்சி கிழக்கில் க.ராஜசேகரன், அமைச்சர் அன்பில் மகேஷின் திருவெறும்பூர் தொகுதியில் குமார், லால்குடி தொகுதியில் சமீபத்தில் அதிமுகவில் இணைந்த லீமா ரோஸ் மார்ட்டின், முசிறி தொகுதியில் யோகநாதன், துறையூர் தொகுதியில் சுரோஜா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அமைச்சர் ரகுபதிக்கு எதிராக...
பெரம்பலூர் தொகுதியில் இளம்பை தமிழ்செல்வனும், நெய்வேலியில் ராஜேந்திரனும், பண்ருட்டியில் மோகனும், கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்தும், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் குறிஞ்சிபாடியில் புவனேந்திரனும், புவனகிரியில் அருண்மொழிதேவனும், சிதம்பரத்தில் பாண்டியனும், சீர்காழியில் சக்தியும், பூம்புகாரில் பவுன்ராஜ்-ம் போட்டியிடுகிறார்கள். அதேபோல, நாகையில் கதிரவனும், திருத்துறைப்பூண்டியில் பால தண்டாயுதம், திருவிடைமருதூரில் இளமதி சுப்ரமணியன், பாபநாசத்தில் சண்முக பிரபு, ஒரத்தநாட்டில் சேகர், பட்டுக் கோட்டையில் சேகர், பேராவூரணியில் கோவி. இளங்கோ, அமைச்சர் ரகுபதியின் திருமயம் தொகுதியில் வைரமுத்து ஆகியோர் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ஓபிஎஸ் தொகுதியில்...
சிவகங்கையில் செந்தில்நாதன், மேலூரில் பெரியபுள்ளான், அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கில் மகேந்திரன், சோழவந்தான் தொகுதியில் மாணிக்கம், மதுரை வடக்கில் சரவணன், உசிலம்பட்டியில் மகேந்திரன், ஆண்டிபட்டியில் லோகிராஜன், ஓ.பன்னீர் செல்வத்தின் தொகுதியான போடிநாயக்கனூரில் நாராயணசாமி, கம்பத்தில் ஜக்கையன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் சந்திரபிரபா, விருதுநகரில் கணேசன், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் அருப்புக்கோட்டை தொகுதியில் சேதுபதி என்பவரும் போட்டியிடுகிறார்கள்.

கன்னியாகுமரியில்...
பரமக்குடி தனி தொகுதியில் முத்தையாவும், திருவாடானையில் கீர்த்திகா முனியசாமியும், அமைச்சர் ராஜகண்ணப்பனின் முதுகுளத்தூரில் மலேசியா S. பாண்டியும், விளாத்திகுளத்தில் சத்யாவும், அமைச்சர் கீதா ஜீவனின் தூத்துக்குடி தொகுதியில் செல்லப்பாண்டியனும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், சங்கரன்கோவிலில் திலிபன் ஜெய்சங்கர், கடையநல்லூரில் கிருஷ்ணமுரளி, தென்காசியில் செல்வமோகன்தாஸ்-பாண்டியன், ஆலங்குளத்தில் பிரபாகரன், நெல்லையில் கணேசராஜா, அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா, பாளையங்கோட்டை தொகுதியில் சையது சுல்தான் சம்சுதீன், கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

யார் யார் விஐபிக்கள்?
அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 10 முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் 30 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 17 பேர் பெண்கள் இடம்பெற்றுள்ளதோடு, 40க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நிறைய பேருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Link
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குக்கர் சின்னத்தில் போட்டி, தினகரன் உறுதி

3
6 mins agoshare
ttv dinakaran ammkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved