குஜராத் மாநிலம் காந்திநகரில் நவராத்திரி திருவிழாவின் எட்டாவது நாளில் மகா ஆரத்தி வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் துர்கா தேவியின் முகத்தை பிரதிபலிக்கும் வடிவில், பக்தர்கள் தங்கள் கைகளில் ஆரத்தியை ஏந்தி வழிபாடு நடத்திய காட்சி காண்போரை பிரமிக்க வைத்தது.