மேட்ரிமோனி ஆப் மூலம் திருமண ஆசைக்காட்டி 15 பெண்களை ஹோட்டலுக்கு வரவழைத்து ஆசையை தீர்த்த ஸ்டைலான மோசடி மன்னனை போலீசார் கைது செய்தனர்.மகாராஷ்டிர மாநிலம் வாலிவ் போலீஸ் ஸ்டேஷனுக்கு 31வயதுடைய பெண் ஒருவர் வந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஹோட்டலுக்கு அழைத்த ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், போலியான வைர நகையை கொடுத்து ஏமாற்றியதாக புகார் அளித்தார். அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸ்க்கு மோசடி மன்னனின் திருமண லீலைகள் தெரிய வந்துள்ளது.அகமதாபாத்தை சேர்ந்தவர் ஹிமன்ஷூ யோகேஷ்பாய் பன்சால். 26வயதான இவர் தனது ஆசைக்கு மேட்ரிமோனி ஆப்பை பயன்படுத்தியுள்ளார். திருமண வரன்களை பதிவிடும் மேட்ரிமோனி ஆப்பில் ஃபேக் புரொஃபைலை உருவாக்கிய பன்சால், தான் டெல்லி கிரைம் பிரான்ச் போலீஸில் சைபர் செக்யூரிட்டியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சைபர் செக்யூரிட்டியை போல் இருக்கும் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் மேட்ரிமோனி வெப்சைட்டில் பகிர்ந்துள்ளார். பார்ப்பதற்கு ஸ்டைலாகவும், கிரைம் பிரான்ச்சில் வேலை செய்வதாகவும் கூறியதை நம்பிய பெண்கள் சிலர் பன்சால் விரித்த வலையில் விழுந்துள்ளனர். திருமணம் தொடர்பாக பேச விருப்பம் தெரிவித்த பெண்களை முதல் சந்திப்பிலேயே ஹோட்டலுக்கு வரவழைப்பதை வழக்கமாக கொண்ட பன்சால், பெண்களை கவரும்படி அழகாக பேசி அவர்களை பாலியல் தேவைக்கு பயன்படுத்தியுள்ளார். பிறகு அந்த பெண்களை தொடர்பு கொள்வதை தவிர்த்துள்ளார். ஒரு பெண்ணை தொடர்பு கொண்டு தனது ஆசையை தீர்த்தப்பின் பன்சாலின் அடுத்த டார்கெட்டாக வேறொரு பெண் இருந்துள்ளார். இப்படியாக கிட்டத்தட்ட 15 பெண்களை தனது ஆசைக்காக வரவழைத்து ஏமாற்றிய பன்சால், அவர்களிடம் இருந்து பணத்தையும் ஏமாற்றி வாங்கியுள்ளார். இந்த வகையில் தான் புகார் அளித்த பெண்ணும் பன்சாலிடம் சிக்கியுள்ளார். அந்த பெண்ணை வாசை மற்றும் அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல்களுக்கு வரவழைத்த பன்சால் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். தன்னை அந்த பெண் நம்ப வேண்டும் என்பதற்காக வைர நெக்லஸை பரிசாக அளித்துள்ளார். அதை சோதனை செய்த போது தான் வைர நெக்லஸ் போலியானது என தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண் பன்சாலை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரை பன்சால் தவிர்த்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில், பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கும் பன்சால் நுனி நாக்கில் சரளமாக இங்கிலீஸ் பேசி பெண்களை குறி வைத்து அவர்களிடம் இருந்து பணத்தை பறித்து கொண்டு பாலியல் வன்கொடுமையும் செய்த தெரிய வந்தது. பன்சால் தன்னிடம் ஏமாந்த பெண்களிடம் செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டது இல்லை. பெரும்பாலும் ஹோட்டல்களில் ரூம் எடுத்து தங்கும் இவர், ஹோட்டல் வைஃபை மூலம் வாட்சல் சேட்களிலும், வாட்சப் அழைப்பு மூலமும் பேசி பெண்களை ஏமாற்றியுள்ளார். இதையடுத்து திருமண மோசடியில் பிடிப்பட்ட பென்சாலிடம் இருந்து 5 செல்போன்கள், ஆப்பிள் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.