news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
tv

Also Watch

tv

Read this

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்

இபிஎஸ் உடன் சந்திப்பு

24

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், சென்னையில் இன்று மார்ச் 13ஆம் தேதி காலை, இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

நாம் தமிழர் கட்சியில்...
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். தமது அதிரடி பேச்சால் குறுகிய காலத்திலேயே பிரபலம் அடைந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது 60,000 வாக்குகள் பெற்றார். அந்த தேர்தலின்போது அவரின் பேச்சுக்கள், சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

விலகினார் காளியம்மாள்
கடந்த பிப்ரவரி மாதம், நாம் தமிழர் கட்சியிலிருந்து, காளியம்மாள் விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என்று அறிவித்தார். எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். அவருடன் திமுக, அதிமுக, தவெக என அனைத்துக் கட்சிகளுமே பேச்சுவார்த்தையில் இருந்ததாக தகவல் வெளியானது.

அதிமுகவில் இணைந்தார்
இந்த நிலையில், இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில், காளியம்மாள் இணைந்தார்.
இணைப்பிற்கு பிறகு காளியம்மாள் கூறியதாவது:
ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அதிமுகவில் இணைந்தேன். ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று, நான் இன்று அதிமுகவில் இணைந்து உள்ளேன்.
இவ்வாறு காளியம்மாள் கூறினார்.
நாகையைச் சேர்ந்த காளியம்மாள், தனது ஆரம்ப காலத்தில் கடலோரப் பகுதி மக்களின் பிரச்​சினை​களுக்கு தீர்வு காணும் வகை​யில், 15 கடலோர மாவட்​டங்​களை ஒருங்​கிணைத்​து, ‘தமிழக மீனவ பெண் தொழி​லா​ளர்​கள் சங்​கம்’ என்ற அமைப்பை ஏற்​படுத்தி, அதன் மாநில பொதுச்​செய​லா​ள​ராக இருந்து வந்தார்.

Related Link
இதுவரை 36, மீதம் இருப்பது 198

இதுவரை 36, மீதம் இருப்பது 198

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

1
2 hrs 53 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved