அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒரு நாள் சம்பளம் வழங்கப்படாது என்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்த நிலையிலும் போராட்டம் நடைபெற்றது. பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர், பதாகைகளை ஏந்தியபடி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இதையும் பாருங்கள் - கொட்டும் மழையில் ஆசிரியர்கள் போராட்டம் | Jacto Geo Strike | Sivagangai