அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி மதசார்பின்மை குறித்து பேசி உள்ளது கண்டிக்கத்தக்கது, வருந்தக்கத்தக்கது என்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக கூறினார்.புதுக்கோட்டை, கவிநாடு கண்மாயில் பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை கூறினார்.விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஏதாவது பேசினால் தான் பெரிய ஆளாக வர முடியும் என்று நினைத்துக்கொண்டு பேசுவதாக கூறியவர், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் நன்றாக உள்ளதாகவும், நீதியரசர்கள் எப்போது வேண்டுமானாலும் சென்று ஆய்வு நடத்திக் கொள்ளலாம் என்றார்.