Also Watch
Read this
Posted on: Jan 27, 2026 05:36 AM
By: Manigandan Raja
ஜனநாயகன் - இதுவரை என்ன நடந்தது?
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று, படக்குழு அறிவித்தது. ஆனால், படத்துக்கு சி.பி.எப்.சி. என்னும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.
தணிக்கை சான்று வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், படத்தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் எல்.எல்.பி. என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.
தனி நீதிபதி உத்தரவு
வழக்கை விசாரித்த, தனி நீதிபதி பி.டி.ஆஷா, 'உடனே தணிக்கை சான்று வழங்க வேண்டும்' என, கடந்த 9ஆம்ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, தணிக்கை வாரியம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வாதங்கள் நிறைவு
இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, மேல் முறையீடு வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved