ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கமே நிற்பதாகவும் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டவிரோத குடியேற்றங்களை இந்தியா ஒரு போதும் ஆதரித்தில்லை என்றும், அப்பாவி மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு நாடு கடத்தப்படுவதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.