சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. மார்ச்-05 தங்கம், வெள்ளி விலை நிலவரம் ஒரு சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 20,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 15,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. மார்ச்-06 தங்கம், வெள்ளி விலை ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 19,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை குறைந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 14,960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. மார்ச்-07 விலை நிலவரம் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,400க்கும், ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,050க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே, அதாவது, ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000க்கும் விற்பனை ஆனது. மார்ச்-09 தங்கம், வெள்ளி விலை ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மார்ச்-10 தங்கம் விலை ரூ.800 உயர்வுஇன்று மார்ச் 10ஆம் தேதி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,20,400க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனை ஆனது. தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் உயர்ந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்... 05.03.3036 - ரூ.1,20,96006.03.2026 - ரூ.1,19,68007.03.2026 - ரூ.1,20,40009.03.2026 - ரூ.1,19,60010.03.2016 - ரூ.1,20,400 Related Link அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்