அர்ஜென்டினாவின் greater Buenos Aires-இல் உள்ள ஆறு அடர் சிவப்பு நிறத்தில் ரத்தம் போல காட்சியளித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் கலக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், பியூனஸ் அயர்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சகம் நிற மாற்றத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக நீர் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளது.