ஹோண்டா நிறுவனம் தனது அமேஸ், சிட்டி, BR-V, ஜாஸ், WR-V மற்றும் ப்ரியோ மாடல்களை உட்பட சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. திரும்பப் பெறப்படும் கார்களின் ஃபியூவல் பம்ப்-இல் கோளாறு இருப்பதாகவும், அதனை ஹோண்டா நிறுவனம் இலவசமாக சரி செய்து கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.