Also Watch
Read this
By: Web Team

ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் 11 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக புதுச்சேரியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட்டும், ஈரோடு, மதுரை விமானநிலையத்தில் தலா 103 புள்ளி 28 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 புள்ளி 22 டிகிரி ஃபாரன்ஹீட், மீனம்பாக்கத்தில் 101 புள்ளி 66 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
கடலூரில் 101புள்ளி 84 டிகிரி ஃபாரன்ஹீட்டும், கரூர் பரமத்தியில் 102 புள்ளி 2 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் வீசியது.
இதேபோல், மதுரை நகரில் 101 புள்ளி 12 டிகிரி ஃபாரன்ஹீட்டும், பாளையங்கோட்டையில் 102 புள்ளி 56 டிகிரி ஃபாரன்ஹீட்டும், தஞ்சையில் 100 புள்ளி 4 டிகிரி ஃபாரன்ஹீட்டும்,
திருச்சியில் 100 புள்ளி 94 டிகிரி ஃபாரன்ஹீட்டும், வேலூரில் 102 புள்ளி 92 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved