இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஐசிசி தொடர்களில் இந்திய அணியை வழிநடத்திய மிதாலி ராஜின் சாதனையை ஹர்மன்ப்ரீத் முறியடித்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கியதன் மூலமாக ஹர்மன்ப்ரீத் கவுர் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்திய முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் 3 முறை ஐசிசி தொடர்களில் வழிநடத்தியதே சாதனையாக இருந்தது. இவர் 2012, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். அதேபோல் ஹர்மன்ப்ரீத் கவுர் 2018, 2020, 2023 மற்றும் 2024 ஆகிய 4 ஆண்டுகளில் வழிநடத்தி தற்பொழுது சாதனை படைத்துள்ளார்.