அசட்(ASET) கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், திமுக எம்.பி.கனிமொழி கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்பித்தார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற அசட்(ASET) கல்லூரியின்பட்டமளிப்பு விழாவில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதனை தொடர்ந்து,விழாவில் பேசிய எம்.பி.கனிமொழி, தமிழ் எந்த காலத்திலும் சாகாது என்றும், யார் எதை கொண்டுவந்து திணித்தாலும் உயிரோடு இருக்கும் என தெரிவித்தார்.