தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்ந்த இடத்தில் இருக்கும் சிறிய மனிதர் என்று திமுக எம்பி ஆ.ராசா விமர்சித்துள்ளார்.சென்னையில் திமுக மாணவரணி கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் உள்நோக்கத்தோடு, கோமாளித்தனமாக, தமிழக ஆளுநர் பேசுவதை ஊடகங்கள் ஏன் பெரிதுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.கல்வியில் அனைத்து வகையிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக ஆவணம் கூறுகிறது என்றும், அந்த ஆவணங்களை பரிசீலிக்காமல் ஆளுநர் கூறுவதை ஏன் பெரிதாக்க வேண்டும் என அவர் வினா எழுப்பினார்.மேலும், ஆளுநருக்கு என்ன கல்வித்தகுதி இருக்கிறது எனவும் ஆ.ராசா சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.