துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக்கின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அவரின் உடல் மீது தேசிய கொடி போர்த்தி மரியாதை செலுத்திய பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.