2024 மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் கூகுள் இந்தியா நிறுவனத்தின் லாபம் 26 சதவிகிதம் அதிகரித்தது. 2023 நிதியாண்டில் நான்காயிரத்து 700 கோடி ரூபாய் லாபம் கிடைத்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 5 ஆயிரத்து 921 கோடியாக அதிகரித்தது என கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கூகுளின் டிஜிட்டல் விளம்பர வருவாய் அதிகரித்துள்ளதே லாபம் இந்த அளவுக்கு அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. லாபம் அதிகரித்ததால் கூகுள் இந்தியா நிறுவனம், தனது ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் சலுகைகளை அதிகரித்து வழங்கியது.