Also Watch
Read this
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ஆயிரத்து 480 ரூபாய் உயர்ந்தது. இதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 50 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

தங்கம், வெள்ளி விலை நிலவரம்
தங்கம், வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தாண்டில் ஒரு லட்சம் ரூபாயை கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாகவே உள்ளது.

கடந்த வாரத்தில்...
கடந்த வாரத் தொடக்கத்தில் சரிவை சந்தித்த ஆபரணத் தங்கத்தின் விலை, அதன்பிறகு ஏறுவதும் இறங்குவதுமாகவே இருந்தது. கடந்த நாட்களில், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை.

மே 04
ஒரு கிராம் தங்கம் ரூ.14,000க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கு விற்பனை ஆனது.

மே 05
இன்று மே 5ஆம் தேதி காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,440 குறைந்து, ரூ.1,10,560க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.180 குறைந்து ரூ.13,820க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 06
ஒரு கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 50 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் விலை நிலவரம்
மே 01 - ரூ.1,11,360
மே 02 - ரூ.1,12,000
மே 04 - ரூ.1,12,000
மே 05 - ரூ.1,10,560
மே 06 - ரூ.1,12,400
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved