ஜார்ஜியாவின் புதிய அதிபராக முன்னாள் கால்பந்து வீரர் மைக்கேல் கவெலஷ்விலி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த அக்டோபரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை ஆளும் ஜார்ஜியா கனவுக்கட்சி கைப்பற்றியது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் மைக்கேல் கவெலஷ்விலி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.