கௌதம் அதானியின் இளைய மகன் திருமணம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது. ஜீத் அதானிக்கும் பிரபல வைர வியாபாரியான ஜெயின்ஷாவின் மகள் திவா ஜெயின் ஷாவுக்கும், ஜெயின் முறைப்படி திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்தை முன்னிட்டு சமூக சேவைகளுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாக கவுதம் அதானி அறிவித்துள்ளார்.