Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 10:51 AM
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதிமுக கூட்டணி
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் தினகரன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், ஜான்பாண்டியன், பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

எதிர் வரும் சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு, ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
பாஜக போட்டியிடும் தொகுதிகள்
1. மைலாப்பூர் (25)
2. தளி (56)
3. மொடக்குறிச்சி (100)
4. உதகமண்டலம் (108)
5. அவினாசி (தனி) (112)
6. திருப்பூர் (தெற்கு) (114)
7. கோயம்புத்தூர் வடக்கு (118)
8. கந்தர்வகோட்டை (தனி) (178)
9. புதுக்கோட்டை (180)
10. திருப்பத்தூர் (185)
11. மதுரை தெற்கு (192)
12. சாத்தூர் (204)
13. திருச்செந்தூர் (215)
14. வாசுதேவநல்லூர் (தனி) (220)
15. ராதாபுரம் (228)
16. நாகர்கோவில் (230)
17. விளவன்கோடு (233)
18. ஆவடி (6)
19. திருவண்ணாமலை (63)
20. தஞ்சாவூர் (174)
21. திருவாரூர் (168)
22. அறந்தாங்கி (183)
23. மானாமதுரை (தனி) (187)
24. ராமநாதபுரம் (211)
25. குளச்சல் (231)
26. பத்மநாபபுரம் (232)
27. ராசிபுரம் (தனி) (92)

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள்
தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார் இபிஎஸ்
எதிர் வரும் சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு, ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
பாமக போட்டியிடும் தொகுதிகள்
1. சேலம் (மேற்கு) (88)
2. தருமபுரி (59)
3. பென்னாகரம் (58)
4. விக்கிரவாண்டி (75)
5. சோளிங்கர் (39)
6. மயிலாடுதுறை (161)
7. திருப்போரூர் (33)
8. உத்திரமேரூர் (36)
9. ஜெயங்கொண்டம் (150)
10. போளூர் (66)
11. செஞ்சி (70)
12 விருத்தாசலம் (152)
13. ரிஷிவந்தியம் (73)
14. காட்டுமன்னார் கோயில் (தனி) (159)
15. கீழ்வேலூர் (தனி) (164)
16. பெரம்பூர் (12)
17. சேலம் (வடக்கு) (89)
18. அம்பத்தூர் (8)

அதிமுக கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு 11 தொகுதிகள்
தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார் இபிஎஸ்
எதிர் வரும் சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் அ.ம.மு.க.வுக்கு, ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அ.ம.மு.க. போட்டியிடும் தொகுதிகள்
1. பெரியகுளம் - தனி
2. மன்னார்குடி
3. திருவையாறு
4. காரைக்குடி
5. திருப்பத்தூர்
6. நாங்குநேரி
7. ஒட்டப்பிடாரம் - தனி
8. திருச்சி மேற்கு
9. சைதாப்பேட்டை
10. பூந்தமல்லி - தனி
11. மடத்துகுளம்
த.மா.கா. மற்றும் ஐ.ஜே.கே.கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்
தமாகா 5 தொகுதிகள்
1. ஒட்டன் சத்திரம்
2. ஈரோடு மேற்கு
3. ராணிப்பேட்டை
4. கிள்ளியூர்
5. கும்பகோணம்
ஜஜேகே போட்டியிடும் தொகுதிகள்
1. பல்லாவரம்
2. குன்னம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved