முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் அக்டோபர் 1 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டுமென சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக 47 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.