போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடையே உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ குறிவைத்து ரஷ்யா சரமாரியாக ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் உள்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த கொடூர தாக்குதலில் 5வயது சிறுமி உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.