news-tamil-logo

3/19/2026, 10:18:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home news திமுக நேர்காணல் தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

திமுக நேர்காணல் தொடக்கம்

அதிரும் தேர்தல் களம்

Posted on: Mar 17, 2026 05:28 AM

3

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் இன்று முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார்.
புதுச்சேரி - காரைக்கால் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று, திமுக தலைமை தேர்வு செய்கிறது.

வருகிறது தேர்தல்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி விட்டது. வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதி, பிரச்சார பொதுக்கூட்டம் என்று, அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறது. தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறது.

இன்று முதல் நேர்காணல்
பரபரப்பான தேர்தல் களத்தில், திமுக கட்சியில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று, மார்ச் 17ஆம் தேதி முதல் நேர்காணல் நடக்க உள்ளது.

15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
திமுகவில் 15,372 விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்தவர்களிடம் இன்று முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் தொடங்க உள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். இன்று தொடங்கி வருகிற 22 ஆம் தேதி வரை தொடர்ந்து நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேர்காணல் முழு விவரம்
* இன்று காலை 9 மணிக்கு புதுச்சேரி, காரைக்கால் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

* நாளை மார்ச் 18ஆம் தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி
பிற்பகல் - மதுரை, தேனி, விருதநகர், சிவகங்கை, ராமநாதபுரம்

* மார்ச் 19ஆம் தேதி காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி
பிற்பகல் - திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி

* மார்ச் 20ஆம் தேதி காலை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை
பிற்பகல் - தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி

* மார்ச் 21 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்
பிற்பகல் - புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்

* மார்ச் 22 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை

நேர்காணலுக்கு பிறகு, வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link

"ஆதவ் அர்ஜுனாவின் கருத்து அநாகரிகமானது"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
6 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved